ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஞ்சாயத் ராஜ் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்
நாடு முழுவதும் இன்று பஞ்சாயத் ராஜ் தினம் கொண்டாடப்படும் நிலையில், ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக பிரதமர் அங்கு சென்றார். இதனை அடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.