26 பேருடன் படகு மாயம்| Dinamalar

டோக்கியோ : ஜப்பானில் 26 பேருடன் கடலில் மூழ்கிய படகை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

கிழக்காசிய நாடான ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள உடோரோ துறைமுகத்தில் இருந்து, 24 பயணியர் மற்றும் இரண்டு ஊழியர்களுடன் ‘கஸூ -1’ என்ற சுற்றுலா படகு நேற்று காலை 10 மணிக்கு புறப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு படகின் பின்பகுதி நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதாக கடலோர காவல் படைக்கு, படகின் ஊழியர் தகவல் தெரிவித்தார். உடனடியாக, பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர். ஆனால், படகை கண்டுபிடிக்க முடியவில்லை. ஹொக்கைடோ தீவு அருகே படகு மூழ்கியிருப்பதால் அங்கு தேடுதல் பணி தீவிரமாக நடக்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.