இந்திய பங்கு சந்தைகளில் நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே ஏற்ற இறக்கம் அதிகம் எனலாம். குறிப்பாக கடந்த சில அமர்வுகளாக மிக அதிகம். ஆனால் இந்த ஏற்ற இறக்கத்தின் மத்தியிலும் கடந்த 5 வர்த்தக அமர்வுகளில் மட்டும், ஒரு பங்கின் விலையானது 20% அதிகரித்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
ஏனெனில் இந்த காலக்கட்டத்தில் பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 0.2 சதவீதம் சரிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது/
என்ன பங்கு அது? இது குறித்து நிபுணர்களின் பரிந்துரை என்ன? இனியும் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம். வாருங்கள் பார்க்கலாம்.
பங்கு பரிந்துரை
இன்று நாம் பார்க்கவிருக்கும் பங்கின் பெயர் மிண்டா கார்ப்பரேஷன். இப்பங்கு குறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் என்ன சொல்கிறது? வாருங்கள் பார்க்கலாம்.
இந்த நிறுவனத்திற்கான ஆரோக்கியமான எதிர்காலம் உள்ள நிலையில், இப்பங்கினை வங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இப்பங்கானது மல்டிபேக்கர் வாய்ப்பினை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு இலக்கு
கடந்த ஒரு வருட காலகட்டத்தில் மட்டும் இப்பங்கின் விலையானது 181% அதிகமாக லாபம் கொடுத்துள்ளது. இதற்கிடையில் இதன் 12 மாத இலக்கு விலையாக 315 ரூபாயினையும் நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். இதன் தற்போதைய நிலவரம் 271.20 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 287 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 93.80 ரூபாயாகும்.
வலுவான ஆர்டர்கள் வரவு
2022ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் வலுவான ஆர்டர்கள், இதன் மதிப்பு சுமார் 4,232 கோடி ரூபாய் ஆகும். இதில் குறிப்பாக மின்சார வாகனங்களுக்காக 843 கோடி ரூபாய் ஆர்டரும் கிடைத்துள்ளது. மொத்தத்தில் ஆரோக்கியமான வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது என தரகு நிறுவனம் கணித்துள்ளது.
வளர்ச்சி எதிர்பார்ப்பு
குறிப்பாக மின்சார வாகன நிறுவனங்கள் உள்பட (ஹீரோ எல்க்ட்ரிக் & பிஎம்டபள்யூ) வலுவான வாகனங்காளுக்கான வலுவான ஆர்டர் புத்தக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது மார்ஜின் விகிதங்களை சேர்க்க உதவும். இது நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Multibagger stock rallies 20% in just 5 days: analysts expect more upside
Multibagger stock rallies 20% in just 5 days: analysts expect more upside/5 நாளில் 20% ஏற்றம்.. இனியும் நல்ல லாபம் கொடுக்கலாம்.. நிபுணர்களின் அட்டகாசமான பரிந்துரை!