சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக 68 ஓட்டங்களில் சுருண்டது குறித்து, பெங்களூரு அணித்தலைவர் டு பிளிஸ்சிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பையின் பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீழ்த்தியது.
பெங்களூரு அணியில் திறமையான துடுப்பாட்ட வீரர்கள் இருந்தபோதும் 68 ஓட்டங்களில் சுருண்டது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணித்தலைவர் பாப் டு பிளிஸ்சிஸ், ‘எங்களுடைய துடுப்பாட்டத்தில் முதல் 4 ஓவரில் தான் தவறு நிகழ்ந்து விட்டது. விரைவில் 4 விக்கெட்டுகளை இழந்ததால் கொஞ்சம் தடுமாறினோம்.
ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. பந்து நன்றாக ஸ்விங் ஆனது. நாங்கள் விளையாடியதில் சிறந்த விக்கெட் இது தான். பந்து ஸ்விங் ஆகும்போது நாம் கொஞ்சம் ஓட்டங்களை தியாகம் செய்திருக்க வேண்டும்.
விக்கெட் விழாமல் களத்தில் நின்று பின்னர் அடித்து ஆடியிருக்க வேண்டும். இந்த தவறை தான் நாங்கள் செய்துவிட்டோம்’ என தெரிவித்தார்.
மேலும், இதை சாக்கு போக்காக கூற விரும்பவில்லை என்றும், இது என்றாவது வேலையில் அமையும் ஒரு மோசமான நாள் தான் என்றும் அவர் குறிப்பிட்ட அவர், செய்த தவறில் இருந்து பாடத்தை கற்றுக் கொண்டு, அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என தெரிவித்தார்.