BIS recruitment 2022 for 276 posts apply soon: இந்திய தரநிலை பணியகத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS), மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் (நுகர்வோர் விவகாரங்கள் துறை), அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பாகும். நாட்டில், தரநிலைப்படுத்தல், தயாரிப்பு மற்றும் அமைப்பு சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் ஹால்மார்க்கிங், ஆய்வக சோதனை போன்ற செயல்பாடுகளுக்கு இந்த அமைப்பு பொறுப்பாகும். இந்த நிலையில், இந்த நிறுவனத்தில், காலியாக உள்ள பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 276 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2022.
Director (Legal)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
வயதுத் தகுதி : 56 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 78,800 – 2,09,200
Assistant Director (Hindi)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master’s Degree/ Post Graduate Degree in Hindi. மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 56,100 – 1,77,500
Assistant Director (Administration & Finance)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MBA. மேலும் 3 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 56,100 – 1,77,500
Assistant Director (Marketing & Consumer Affairs)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MBA. மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 56,100 – 1,77,500
Personal Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 28
கல்வித் தகுதி : இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 35,400 – 1,12,400
இதையும் படியுங்கள்: சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Assistant Section Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 47
கல்வித் தகுதி : இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 35,400 – 1,12,400
Assistant (Computer Aided Design)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Bachelor‘s Degree in Science with Auto CAD. மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 35,400 – 1,12,400
Stenographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 22
கல்வித் தகுதி : இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 25,500 – 81,100
Senior Secretariat Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 100
கல்வித் தகுதி : இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 25,500 – 81,100
Horticulture Supervisor
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 19,900 – 63,200
Technical Assistant (Laboratory)
காலியிடங்களின் எண்ணிக்கை : 47 (Mechanical – 19, Chemical – 18, Microbiology – 10)
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 35,400 – 1,12,400
Senior Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 25 (Carpenter – 6, Welder – 2, Plumber – 3, Fitter – 3, Turner – 5, Electrician – 6)
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 25,500 – 81,100
வயது வரம்பு : SC/ ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், PwD பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சில பணியிடங்களுக்கு கூடுதலாக திறன் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.bis.gov.in/index.php/advertisement-for-various-posts-in-bisadvertisement-no-2-2022-estt/ அல்லது https://ibpsonline.ibps.in/bisrvpmar22/ என்ற இணையதள பக்கங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.05.2022
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினர் ரூ.500. SC/ST, மாற்றுதிறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.bis.gov.in/wp-content/uploads/2022/04/Final-English-16-Apr-2022-2-files-merged.pdf என்ற இணையதளப்பக்கத்தினைப் பார்வையிடவும்.