காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வலைதளங்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் அஜித். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர் .
சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண் இருவரும் பிரிந்து விடலாம் என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த காதலிக்கும் போது இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.