அமெரிக்காவில் உள்ள ஒரு கல்லூரி ஆபாசப் படங்கள் பற்றிய பாடத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது. அங்கே மாணவர்கள் ஒன்றாகப் அமர்ந்து ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்கள்.
போர்னோகிராஃபி என்கிற ஆபாச வீடியோக்கள் உலகம் முழுவதும் பார்க்கப்படுகின்றன. இது பல ஆண்டுகளாக ஆபாச திரைப்படத் துறையை பில்லியன் டாலர் வணிகமாக மாற்றியுள்ளது. பல நாடுகளில் ஆபாசப் படம் பார்ப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்பட்டாலும், அமெரிக்காவில் உள்ள இந்தக் கல்லூரி இப்போது ஆபாசப் படம் பற்றிய படிப்பை வழங்குகிறது.
அமெரிக்காவில் உள்ள ஒரு கல்லூரி ஆபாசப் படங்கள் குறித்த பாடத்திட்டத்தை வழங்குவதற்காக உலக அளவில் வைரலாகி வருகிறது. அந்த கல்லூரியில் ஆபாச படம் பற்றிய பாடத்தில், மாணவர்கள் ஆபாசப் படங்களை ஒன்றாகப் பார்க்கிறார்கள். கல்லூரி இணையதளத்தின் ஸ்கிரீன்ஷாட், ஆஃப்-பீட் பாடத்தின் பெயர் ‘ஃபிலிம் 2000 போர்ன்’ என்று காட்டுகிறது.
முன்னதாக, உட்டாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியால் வழங்கப்படும் ஆபாசப் படம் பற்றிய பாடம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது அமெரிக்க ஊடகங்களில் சர்ச்சைக்குள்ளான போதிலும், அந்தப் படிப்பு இன்னும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தியது.
ஆபாசப் படங்கள் பற்றிய பாடத்தின் ஸ்கிரீன் ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதையடுத்து வைரலானது. போர்னோ படிப்பில், மாணவர்கள் ஆபாசப் படங்களை ஒன்றாகப் அமர்ந்து பார்க்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடம் 2022-23 கல்வி அமர்வுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இது குறித்து ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய கல்லூரியின் செய்தித் தொடர்பாளர், மாணவர்களுக்கு சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்க பல்கலைக்கழகம் அடிக்கடி இதுபோன்ற படிப்புகளை வழங்குகிறது. இந்த படிப்புகளின் விளக்கங்கள், சில வாசகர்களுக்கு கவலையளிக்கும் அதே வேளையில், மாணவர்கள் சர்ச்சைக்குரிய விஷயங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட விரும்புகிறீர்களா என்பதை தீர்மானிக்க உதவுகின்றன” என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், இந்த கல்லூரி கடந்த காலங்களில் இந்தப் பாடத்திட்டத்தை பலமுறை வழங்கியுள்ளது. ஆனால், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த போர்னோகிராஃபி படிப்பு 2022-23 கல்வியாண்டுக்காக புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று யு.எஸ்.ஏ டுடே பத்திரிகை தெரிவித்துள்ளது.
“ஹார்ட்கோர் ஆபாச படங்கள் ஆப்பிள்களைப் போல அமெரிக்கன் சண்டே கால்பந்தை விட மிகவும் பிரபலமானது. இந்த பில்லியன் டாலர் தொழில்துறைக்கான எங்களுடைய அணுகுமுறை பாலியல் ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிக்கும் மற்றும் வலுப்படுத்தும் ஒரு கலாச்சார நிகழ்வு ஆகும் (ஆனால் பாலியல் மற்றும் பாலின விதிமுறைகளை சவால் செய்யும் திறனைக் கொண்டுள்ளது). இது தீவிர சிந்தனை தேவைப்படும் ஒரு கலை வடிவமாகும். நாங்கள் ஒன்றாக அமர்ந்து ஆபாசப் படங்களைப் பார்ப்போம். இனம், வர்க்கம் மற்றும் பாலினம் ஆகியவற்றின் பாலியல்மயமாக்கலை சோதனை செய்து, தீவிரமான கலை வடிவமாக விவாதிப்போம்.” என்று இந்த போர்னோகிராஃபி பாடத்திட்டம் பற்றி சமூக ஊடகங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“