சென்னை: சென்னையில் பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாகவிசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக வுக்கு அருகதை இல்லை” என்று கூறியிருந்தார். அதற்கு, “அம்பேத்கர், பிரதமர் மோடி குறித்து திருமாவள வனுடன் விவாதம் நடத்த தயாராகஉள்ளேன்” என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறி னார்.
இதற்கு பதிலளித்த தொல்.திருமாவளவன், “அண்ணாமலையுடன் விவாதிக்க, அவரைப் போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சப்-ஜூனியரை வேண்டும் என்றால் அனுப்பி வைக்கிறோம்” என்று கூறினார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
திருமாவளவனுடைய கட்சியினர்அனைவரும் நம்முடைய அலுவலகத்துக்கு வந்து, அவர்கள் விரும்பும்புத்தகங்களை வருகிற 26-ம் தேதிபகல் 12 மணிக்கு கொடுக்கலாம். நம் அலுவலகத்தில் தயாராக இருக்ககூடிய புத்தகங்களையும் வாங்கிச் செல்லலாம். அதன் பின்பு, திருமாவளவனிடம் தேதியையும் நேரத்தையும் கட்சியினர் கூட்டாக அமர்ந்து முடிவு செய்து சொல்லட்டும். அவர்கள் சொல்லும் இடத்துக்கு நான் கட்டாயம் வருகிறேன்.
அனைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சகோதார சகோதரிகளை பாஜக அலுவலகத்துக்கு வருகிற 26-ம் தேதி வரவேற்கிறேன். அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பிரதமர் மோடி.
இவ்வாறு அந்த பதிவில் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.