லக்னோ: அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸ், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில் ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக மகந்த் நிருத்ய கோபால் தாஸ், ௮௪, தலைமையில், 15 உறுப்பினர்கள் அடங்கிய ‘ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. இந்த அறக்கட்டளை, அயோத்தியில் கோவிலை கட்டி வருகிறது.
இந்நிலையில், அறக்கட்டளையின் தலைவர் நிருத்ய கோபால் தாஸ் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.’அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது’ என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
லக்னோ: அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸ், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டுள்ளார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.