உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தால் உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான வர்த்தகத் தடைகளை விதித்த நிலையில், தற்போது ரஷ்ய நிறுவனங்கள் வர்த்தகத்திற்காகச் சீனாவை விடுத்து இந்தியாவிற்கு வந்துள்ளது.
இதுவும் ஒன்றோ, இரண்டோ இல்லை. பல துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இந்தியாவிற்குப் படையெடுத்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
மின்சார தட்டுப்பாடு: இந்தியாவின் நிலைக்கு ரஷ்யா காரணமா..?
ரஷ்யா நிறுவனங்கள்
ரஷ்யாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் தளமான OZON, Yandex Market, உணவுப் பொருட்கள் விற்பனை நிறுவனமான பார்மா ஸ்டாண்டர்ட், டென்டல் துறை நிறுவனமான Simkodent, சில்லறை உணவுப் பொருட்கள் விற்பனை நிறுவனமான X5 ரீடைல் குரூப், Uniconf போன்ற பல நிறுவனங்கள் தற்போது இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டியது மட்டும் அல்லாமல் சில நிறுவனங்கள் ஒப்பந்தமும் செய்துள்ளது.
இந்தியா – ரஷ்யா
இந்தியா – ரஷ்யா மத்தியில் நட்புறவு சிறப்பாக இருக்கும் நிலையில் உலக நாடுகள் தடை விதித்த பின்பும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்கள், ராணுந உபகரணங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து வாங்க தயாராக இருக்கும் நிலையில், தற்போது ரஷ்யாவும் இந்தியாவிடம் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க
ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பிராண்டுகள் அந்த நாட்டுக்கு நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டன. இதனால் மக்கள் பயன்படுத்தும் பல முக்கியப் பொருட்களும் இல்லாமல் ரஷ்யா தடுமாறத் துவங்கியுள்ளது.
போருக்கு முன்
இந்திய நிலையில் தான் ரஷ்யா போருக்கு முன்பு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைத் தற்போது இந்தியாவிடம் இருந்து வாங்க தயாராகியுள்ளது.
Yandex மார்க்கெட்
இதில் குறிப்பாக Yandex மார்க்கெட் நிறுவனம் இறக்குமதி, லாஜிஸ்டிக்ஸ், சுங்க அனுமதி, சேமிப்பு மற்றும் பொருட்களை விநியோகம் ஆகிய பிரிவில் இயங்கி வருகிறது. இந்தியா உடன் ஆர்வமாக வர்த்தகக் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டிய முக்கிய நிறுவனமாக உள்ளது.
முக்கியப் பொருட்கள்
Yandex மார்க்கெட் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஆடை மற்றும் ஃபேஷன், குழந்தைகள் பொம்மைகள், படுக்கை துணி, வீட்டு அலங்கார பொருட்கள், ஜவுளி துணிகள், நுகர்வோர் மின்னணுவியல், சமையலறை பொருட்கள், தேயிலை மற்றும் தோல் பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
X5 ரீடைல்
சில்லறை உணவு பொருட்கள் விற்பனை நிறுவனமான X5 குளிர்பானங்கள், கடல் உணவுகள், தேநீர், காபி, சிக்கரி, அரிசி, பதிவு செய்யப்பட்ட உணவுகள், சமையலறைப் பொருட்கள் மற்றும் புதிய திராட்சைகள் போன்ற பொருட்களை இந்தியாவில் இருந்து வாங்க திட்டமிட்டுச் சப்ளையர்களைத் தேடி வருகிறது.
Russian companies entering into India for business tieup to avoid western products
Russian companies entering into India for business tieup to avoid western products இந்தியாவுக்குப் படையெடுக்கும் ரஷ்ய நிறுவனங்கள்.. இனி பொற்காலம் தான்..!