தவறான தகவல்களைப் பரப்பியதாக 16 யூடியூப் சேனல்களை இந்திய அரசு முடக்கியுள்ளது.
நாட்டின் தேசியப் பாதுகாப்பு, அயலுறவு, பொது ஒழுங்கு ஆகியன தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக இந்தியாவைச் சேர்ந்த 10 யூடியூப் சேனல்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த 6 யூடியூப் சேனல்கள் ஆகியவற்றை மத்தியச் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது.
68 கோடிக்கு மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்டுள்ள இந்தச் சேனல்கள் தவறான, சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பிப் பதற்றத்தை உருவாக்கி, சமுதாய நல்லிணக்கத்தையும் பொது ஒழுங்கையும் குலைத்ததாக அரசு தெரிவித்துள்ளது.