மும்பை,
ஐ.பி.எல். முடிந்ததும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இந்தியாவுக்கு வந்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஜூன் 9-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
அதைத் தொடர்ந்து 2 முதல் 5-வது ஆட்டங்கள் முறையே கட்டாக் (ஜூன்.12), விசாகப்பட்டிணம் (ஜூன்.14), ராஜ்கோட் (ஜூன்.17), பெங்களூரு (ஜூன்.19) ஆகிய நகரங்களில் நடக்கிறது.
அக்டோபர்-நவம்பர் மாதம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள நிலையில், அதையொட்டி இளம் வீரர்களை பரிசோதித்து பார்க்க இந்த தொடர் இந்தியாவுக்கு அருமையான வாய்ப்பாகும்.