இலங்கை அரசை கவிழ்க்க 120 உறுப்பினர்கள் தயார்!| Dinamalar

கொழும்பு : நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

இந்நிலையில், அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உறுப்பினர்களின் ஆதரவை கோரும் முயற்சியில் பிரதான எதிர்கட்சியான சமகி ஜன பாலவேகயா ஈடுபட்டது. பார்லி.,யில் மொத்தம் 225 உறுப்பினர்களை உள்ளனர். இதில், 113 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால், அரசுக்கு எதிரான நம்பிக்கை ஓட்டெடுப்பு வெற்றி பெறும்.

இந்நிலையில், எதிர்கட்சியினர் அரசுக்கு எதிராக 113 உறுப்பினர்களின் ஆதரவு பெற்றால் அரசை அவர்களிடம் ஒப்படைப்பதாக அதிபர் கோத்தபய தெரிவித்தார். ‘ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன்’ என, கூறினார். இந்நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசுக்கு எதிராக ஓட்டளிக்க 120 உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி உள்ளதாக, முன்னாள் அமைச்சர்கள் உதயா கம்மன்பிலா மற்றும் விமல் வீரவன்சா தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.