வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு:ஊஇலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்ற தேவையான, 113க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதாக அதிருப்தி எம்.பி.,க்கள் தெரிவித்தனர்.
நம் அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதால், அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் தவறான நிர்வாகத்தினால் இந்த நிலை ஏற்பட்டதாக அவர்களது கூட்டணி கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உறுப்பினர்களின் ஆதரவை கோரும் முயற்சியில் பிரதான எதிர்கட்சியான சமகி ஜன பாலவேகயா ஈடுபட்டது.
பார்லி.,யில் மொத்தம் 225 உறுப்பினர்களை உள்ளனர். இதில், 113 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால், அரசுக்கு எதிரான நம்பிக்கை ஓட்டெடுப்பு வெற்றி பெறும்.இந்நிலையில், எதிர்கட்சியினர் அரசுக்கு எதிராக 113 உறுப்பினர்களின் ஆதரவு பெற்றால் அரசை அவர்களிடம் ஒப்படைப்பதாக அதிபர் கோத்தபய தெரிவித்தார். ‘ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன்’ என, கூறினார்.இந்நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசுக்கு எதிராக ஓட்டளிக்க 120 உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி உள்ளதாக, முன்னாள் அமைச்சர்கள் உதயா கம்மன்பிலா மற்றும் விமல் வீரவன்சா தெரிவித்துள்ளனர்.
Advertisement