இலங்கை: 2 வாரத்திற்கு பின் துவங்கிய பங்குச்சந்தை.. 30 நிமிடத்தில் 13% சரிவு.. மீண்டும் முடங்கியது..!

பொருளாதாரச் சரிவு, விலைவாசி உயர்வு, நாடு முழுவதும் மக்கள் போராட்டம், மின் வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, நிதி நெருக்கடி, எப்போது வேண்டுமானாலும் அரசு வீழும் அபாயம், நாணய மதிப்புச் சரிவு, அரசு சொத்துக்கள் மக்களால் அடித்து நொறுக்கப்படும் நிலை, நாட்டைக் காப்பாற்ற ஐஎம்எப்-டம் கடன் கேட்டு பணத்திற்காகக் காத்திருக்கும் இலங்கையில், பங்குச்சந்தை 2வது முறையாக மூடப்பட்டு உள்ளது.

மொத்த வர்த்தகச் சந்தையும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இலங்கை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மொத்த பணத்தையும் இழந்து உள்ளனர்.

கைவிட்ட சீனா.. சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தும் இலங்கை.. பில்லியன் கிடைக்குமா?

இலங்கை பொருளாதாரம்

இலங்கை பொருளாதாரம்

இலங்கை பொருளாதாரம் வேகமாகச் சரிந்து வரும் நிலையில் அந்நாட்டுப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வரும் காரணத்தால் வேகமாகச் சரிந்து வந்தது. இதனால் 2 வாரமாக இலங்கை பங்குச்சந்தை மூடப்பட்டு இருந்தது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை வெளியேற்ற முடியாமல் இருந்தது.

இலங்கை பங்குச்சந்தை

இலங்கை பங்குச்சந்தை

2 வாரத்திற்குப் பின்பு இலங்கை பங்குச்சந்தை இன்று துவங்கப்பட்ட நிலையில் முதலீட்டாளர்கள் கிடைக்கும் வாய்ப்பை விடக் கூடாது என முடிவு செய்து அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறினர். இதனால் 13 சதவீத சரிவை எதிர்கொண்டது இலங்கை பங்குச்சந்தை தடாலடியாக அரசின் உத்தரவின் பெயரில் முடக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம்
 

ஏப்ரல் மாதம்

ஏப்ரல் மாதத்தில் 2வது முறையாக மூடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை புத்தாண்டு விடுமுறை, அரசின் வட்டி உயர்வு, 51 பில்லியன் டாலர் கடனை செலுத்த முடியாது என அறிவிப்பு, அரசு தலைவர்கள் ராஜினாமா ஆகியவை இந்த 2 வார காலத்தில் இலங்கை எதிர்கொண்ட முக்கிய முடிவுகளாகும். இன்றும் இலங்கை மக்கள் உணவு பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் நிலை நிலவுகிறது.

40 சதவீதம் சரிவு

40 சதவீதம் சரிவு

ஜனவரி மாதத்தில் இருந்து இலங்கை பங்குச்சந்தையும், இலங்கை நாணயத்தின் மொத்த மதிப்பு சுமார் 40 சதவீதம் சரிந்து உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு நிமிடத்தில் 7 சதவீத சரிவை பதிவு செய்தது, அதன் பின்பு அடுத்த 30 நிமிடத்தில் கூடுதலாக 5 சதவீதம் சரிந்து ஆட்டோமேட்டிங் முறையில் வர்த்தகம் செய்வது நிறுத்தப்பட்டு மூடப்பட்டது.

இலங்கை திண்டாட்டம்

இலங்கை திண்டாட்டம்

இலங்கை பொதுவாகவே இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை நம்பிதான் இயங்கி வந்தது, ஆனால் அதிகப்படியான கடன், தவறான நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது ஐஎம்எப் புதிய கடனை அளிக்கவில்லை எனில் இலங்கையின் நிலை திண்டாட்டம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SriLanka stock exchange fall 13 percent; halts 2nd time in april

SriLanka stockexchange fall 13 percent; halts 2nd time in april இலங்கை: 2 வாரத்திற்குப் பின் துவங்கிய பங்குச்சந்தை.. 30 நிமிடத்தில் 13% சரிவு.. மீண்டும் முடங்கியது..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.