சமீபத்தில் புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதியிருந்த இசைஞானி இளையராஜா, அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு புகழாரம் சூட்டியிருந்தார். அவருடைய இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவும் எதிர்ப்புகளும் எழுந்தன.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் பொதுக்கூட்டம் ஒன்றில் இளையராஜாவை கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது, இசையில் மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா வாசிப்பவன் எல்லாம் இசையமைப்பாளர் ஆகிவிட முடியாது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
உணவுக்கு வழி இல்லாமல் இருந்தபோது கம்யூனிஸ சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்ட நீ பணமும் புகழும் வந்ததும் உயர்ந்த ஜாதி என்று ஆகிவிடுவாயா? என்று கேட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வயது 80ஐ தாண்டிய நிலையில் இன்னும் இளையராஜா என்றும் நக்கலடித்தார்.
மேலும் பேராசையால் பணமும் புகழும் வர வேண்டும் என பக்திமானாகிவிட்டாய் என்று சாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன், இளையராஜாவை நீ போ வா என ஒருமையிலும் சாடினார். ஈவிகேஎஸ் இளங்கோவனின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரபல இயக்குநரான பா ரஞ்சித்தும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
Aishwarya Rajinikanth: கொழுந்தனுடன் கூட்டு சேரும் ஐஸ்வர்யா… செம காண்டில் சவுந்தர்யா!
இதுதொடர்பான அவரது டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, ‘பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே’ என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது… என கூறியுள்ளார்.