உக்ரைன் ரயில் நிலையங்களை ஏவுகணையால் அழித்த ரஷ்யா: 5 பேர் பரிதாபமாக பலி!


செய்தி சுருக்கம்:
  • உக்ரைனின் 5 ரயில் நிலையங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.
  • 5 பேர் உயிரிழப்பு 18 பேர் படுகாயம் என பிராந்திய வழக்கறிஞர் அலுவலகம் அறிவிப்பு
  • “எதிரி முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க முயற்சிக்கிறார்” என பிராந்திய ஆளுநர் குற்றசாட்டு

உக்ரைனின் மத்திய மற்றும் மேற்கு நகரங்களின் ஐந்து ரயில் நிலையங்களை ரஷ்யா எவுகணைகளை கொண்டு தாக்கி அழித்துள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் தொடங்கிய 60 நாள்களுக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரிகளான வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்(Antony Blinken) மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின்(Lloyd Austin) ஆகியோர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி-யை(Zelenskyy) இன்று தலைநகர் கீவ்-வில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில் உக்ரைனின் ராணுவ பலத்தை அதிகரித்து கொள்வதற்காக அமெரிக்கா 322 மில்லியன் டாலர்களை வழங்குவதாக உறுதியளித்தது.

இந்த நிலையில் அமெரிக்க அதிகாரிகளின் உக்ரைன் வருகைக்கும், அவர்கள் அளித்த வாக்குறுதிக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா, மத்திய மற்றும் மேற்கு உக்ரைன் நகரங்களின் ஐந்து ரயில் நிலையங்களை எவுகணைகள் கொண்டு தாக்கியுள்ளது.

இதையடுத்து உக்ரைனின் மத்திய வின்னிட்சியா பிராந்தியத்தின் Zhmerynka மற்றும் Kozyatyn அகிய இரண்டு நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் ரஷ்யா நடத்திய எவுகணை தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் வரை கொல்லப்பட்டதாக பிராந்திய வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் 18 பேர் வரை காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதல் செய்திகளுக்கு: போர் நிறுத்தம் தொடர்பாக பாதுகாப்பு உத்திரவாதம் வேண்டும்…உக்ரைன் துணைப் பிரதமர் வேண்டுகோள்!

இதுதொடர்பாக அந்த பகுதியின் பிராந்திய ஆளுநர் டெலிகிராமில் வெளியிடப்பட்ட வீடியோவில் “எதிரி முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க முயற்சிக்கிறார்” என குற்றம் சாட்டியிருந்தார்.    

இந்த செய்திக்கான் வளம்: BBC



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.