உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற பெருமை பெற்ற மூதாட்டி
கேன் தனகா
. ஜப்பானின் புகுவோகா நகரைச் சேர்ந்தவரான இவர், தமது 119 வயதில் அண்மையில் (ஏப்.19) காலமானார். இந்த தகவலை ஜப்பான் அரசு தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
கடந்த 1903 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி பிறந்த கேன் டனாகா, கடந்த 2019 இல் தனது 116 ஆவது வயதில், உலகிலேயே மிகவும் வயதான நபர் என்ற பெருமையுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.
தமது 19 வயதில் திருமணம் செய்த கொண்ட தனகா, கணவர் ஹிடியோவும், அவரது மூத்த மகனும் 1937 இல் சீன-ஜப்பானியப் போரில் சண்டையிடச் சென்றபோது, நூடுல்ஸ் கடையை நடத்தியுள்ளார்.
நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுத்த திடீர் முடிவு!
சாக்லேட், சோடா போன்ற ருசியான உணவுகளை உண்பதுடன், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது தனது ஆயுளை நீட்டித்துள்ளதாக தனகா முன்பொரு தருணத்தில் தெரிவித்திருந்தார்.
உலகிலேயே அதிக வயதான பெண்மணி என்ற பெருமையுடன் வாழ்ந்து வந்த தனகா காலமானதையடுத்து, பிரெஞ்சுப் பெண்மணியான லூசில் ராண்டன் என்பவர் தற்போது உலகின்மிக வயதான நபராக உள்ளார். அவருக்கு வயது 118.