உலகில் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி செலவிடும் நாடுகளில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது.
2021ஆம் ஆண்டில் இந்தியா பாதுகாப்புத் துறைக்கு 7660 கோடி டாலரைச் செலவிட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டைவிடப் பூச்சியம் புள்ளி 9 விழுக்காடு அதிகமாகும். இது இந்திய மதிப்பில் 5 இலட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். 2012ஆம் ஆண்டு ஒதுக்கியதை விட இது 33 விழுக்காடு அதிகமாகும்.
முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 80 ஆயிரத்து 100 கோடி டாலரைச் செலவிட்டுள்ளது. ஐந்தாமிடத்தில் உள்ள ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைச் செலவு 6590 கோடி டாலராகும்.