நீலகிரி: ஊட்டியில் துணைவேந்தர்கள் 2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்ற காலை தொடங்கி வைத்தார்.
தமிழக ஆளுநர் மாளிகை சார்பில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள்மாநாடு உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்றும்,நாளையும் (திங்கள், செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது. இந்த 2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ்குமார், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
இந்த மாநாட்டில், புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு, 2047-ம் ஆண்டு இந்தியா முன்னணி ஆகிய கருத்துகளை மையப்படுத்தி நடத்தப்படும் இந்த மாநாட்டில், பல்கலைக்கழக மானியக் குழுத் (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல்அலுவலர் ஸ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்று கின்றனர்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநிலஅரசே நியமிக்கும் சட்டமசோதா! சட்டப்பேரவையில் இன்று தாக்கல்…