ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயம் சென்றிருந்த புடின், உதட்டைக் கடித்துக் கொண்டு படபடப்புடன் காணப்படும் காட்சிகள் வெளியாகி என்னதான் ஆயிற்று புடினுக்கு என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ஈஸ்டர் ஆராதனையில் பங்குகொண்ட புடின், ஓரிடத்தில் அமைதியாக நிற்காமல் உடலை அசைத்துக்கொண்டு, உலர்ந்த வாயை ஈரப்படுத்திக்கொண்டு நிற்பதைக் காணலாம்.
வாய் உலர்ந்துபோதல் பார்க்கின்சன் நோயின் அறிகுறிகளில் ஒன்றாகும்.
அவரது படையினர் உக்ரைனில் கொலைவெறித்தாக்குதல்கள் நடத்திக்கொண்டிருக்கும்போது ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவதற்காக தேவாலயத்தில் நிற்கும் புடின், பாதிரியார்கள் கூறுவதற்கு சபையினர் பதில் சொல்லும் வார்த்தைகளைக் கூட சொல்லவில்லை என அவரை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக Reuters பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஆக, அந்த காட்சிகளைப் பார்த்தவர்கள், புடின் உடல் நல பாதிப்பாலும், மன உறுதி குறைவாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதுகிறார்கள்.