பெங்களூரு : ”கர்நாடகாவில் மங்களூரு உட்பட 19 இடங்களில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்கப்படும்,” என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார் கூறினார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:கர்நாடகாவில் 19 புதிய இ.எஸ்.ஐ., புதிய மருத்துவமனை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், தட்சிண கன்னடாவின் பன்ட்வாள், உஜிரே, கஞ்ஜிமட், உடுப்பியின் படுபித்ரேயில் தயாராக உள்ள புதிய இ.எஸ்.ஐ.,மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது.இது தவிர சிஞ்சோளி, அரசிகரே, கோலார், நரசிபுரா, சண்டூர், கனகபுரா, சவுபாத், யாத்கிர், ஹத்தரகி, ராணிபென்னுார், முதோள், கவுரிபிதனுார், வசந்தநரசாபுரா, சிர்சி, கும்டா ஆகிய இடங்களில் புதிய இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் அமைக்கப்படுகிறது.ஹுப்பள்ளி, தாவணகரேயில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் துரித கதியில் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு : ”கர்நாடகாவில் மங்களூரு உட்பட 19 இடங்களில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்கப்படும்,” என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார் கூறினார்.பெங்களூரில் நேற்று அவர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.