காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்த விக்னேஷ் கும்பத்திற்கு திமுக அரசு அநீதி இழைப்பதாக இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் தடா ஜெ. அப்துல் ரஹீம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் படுகொலைக்கு நீதி பெற்று கொடுத்த திமுக . விக்னேஷ் படுகொலைக்கு அநீதி இழைக்கும் திமுக அரசை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
சந்தேக மரணம் என்றால் அவரது உடலை எரிக்க கூடாது ஆனால் காவல்துறை குதிரை ஓட்டும் தொழில் செய்து வந்த விக்னேஷ் உடலை அவசர அவசரமாக எரித்தது ஏன் ?
சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே, இரவு வாகன சோதனையில் காவல்துறை ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக ஆட்டோவில் சென்ற திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த, மெரினாவில் குதிரை ஓட்டுபவரான விக்னேஷ், ஆகியோரை காவல்துறை பிடித்து தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன்பின், ரகசிய இடத்திற்கு கூட்டிச் சென்று காவல்துறை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மறுநாள் விக்னேஷ் உயிரிழந்தார்.
போஸ்ட்மார்ட்டம் செய்த பிறகு சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைப்பது தானே காவல்துறை பணி அதை விடுத்து இறுதி சடங்கு செய்ய வேண்டிய அவசியம் காவல்துறைக்கு ஏன் வந்தது இதுவே மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.
சம்பவத்தில் தொடர்புடைய, புகழும் பெருமாள், பொன்ராஜ், தீபக் ஆகிய மூன்று காவல்துறையினரை ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதாக கூறப்படுகிறது ஆனால் இவர்கள் மூன்று பேரையும் முதலில் கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும் அதன் பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு விடலாம்.
விக்னேஷ் மரணத்திற்கு காரணமான காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.