குஜராத்: குஜராத் கடல் பகுதியில் 56 கிலோ போதைப் பொருளுடன் ஊடுருவிய பாகிஸ்தான் மீன்பிடிப் படகு பிடிபட்டது. அல் – ஹஜ் என்ற பெயர் உள்ள பாகிஸ்தான் பாடலில் வந்த 9 பேரையும் இந்திய கடலோர காவல்படை கைது செய்தது. பிடிபட்ட பாகிஸ்தான் படகு, 9 பேரை ஜக்காவ் துறைமுகத்துக்கு அழைத்து வந்து அதிகாரிகளிடம் கடலோர காவல்படை ஒப்படைத்தது.