டெல்லி: கூடங்குளம் கழிவுகளை கையாளுவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகள் சரியாகக் கையாளாமல், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் இருப்பதாக கூறி பூவுலகின் சுந்தர்ராஜன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றாமல் கடலில் கொட்டப்படுவதாகவும் இதனால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் எனவும், எனவே உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படும் வரை அணு உலையில் மின் உற்பத்திக்கு தடைவிதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதனை விசாரணை நீதிபதிகள், கூடங்குளம் கழிவுகளை கையாளுவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
