பெங்களூரு,
இளையோருக்கான 2-வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் பெங்களூருவில் உள்ள கான்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகதொடங்கியது.
போட்டியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். விளையாட்டை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் வீடியோ பேச்சு விழாவில் ஒளிபரப்பப்பட்டது.
வருகிற 3-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 200 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 3, 879 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் 20 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள்.