கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுபடுத்த சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது, கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை திமுக அரசு எடுத்தது. அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு குறைந்தது.
தமிழகத்தில் 91 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
கொரோனாவால் ஏற்படும் அத்தகைய சூழ்நிலையை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். கொரோனா பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் அரசுதுறைகளும் எடுக்க வேண்டும்.
கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த ஆயுதம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.