கோடீஸ்வரர் ஆக டாடா கொடுத்த வாய்ப்பு.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

டாடா குழுமத்தினை சேர்ந்த ஆட்டோமோட்டிவ் ஸ்டாம்பிங்ஸ் & அசெம்பிளிஸ் (Automotive Stampings & Assemblies ) பங்கு விலையானது, கடந்த ஒரு வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தினை கொடுத்துள்ளது.

இப்பங்கின் விலையானது கடந்த ஏப்ரல் 22, 2021 அன்றூ 31.65 ரூபாயாக இருந்த நிலையில், இந்த பங்கின் விலை கடந்த ஏப்ரல் 22, 2022 அன்று 578.05 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இப்பங்கானது கடந்த ஒரு வருட காலகட்டத்தில் 1726% லாபம் கொடுத்துள்ளது, இதே காலக்கட்டத்தில் சென்செக்ஸ் 18.96 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.

திவாலாகும் பியூச்சர் குரூப்.. கண்ணீருடன் கிஷோர் பியானி.. ரிலையன்ஸ், அமேசான் கைவிட்டது..!

கோடீஸ்வரர் வாய்ப்பு

கோடீஸ்வரர் வாய்ப்பு

இப்பங்கினில் கடந்த ஆண்டு 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தோமானால், இன்று அதன் மதிப்பு 1 கோடி ரூபாய்க்கு மேல். இதே 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 18 லட்சம் ரூபாய்க்கு மேல். மைக்ரோகேப் நிறுவனமாக இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பினை கடந்த ஒரு வருடத்தில் கொடுத்துள்ளது.

இன்றைய பங்கு விலை நிலவரம்

இன்றைய பங்கு விலை நிலவரம்

இன்று என் எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 5% குறைந்து, 543.95 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே இதன் இன்றைய உச்ச விலை 579.90 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 543.95 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்ச விலை 925.45 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 31.10 ரூபாயாகும்.

இதே பி எஸ் இயில் இப்பங்கின் விலையானது 5% குறைந்து, 549.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே இதன் இன்றைய உச்ச விலை 590.90 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 549.15 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்ச விலை 923.85 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 31.25 ரூபாயாகும்.

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?
 

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

மைக்ரோகேப் பங்கானது இது டெக்னிக்கலாக பார்க்கும்போது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜீக்கும் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் சந்தை மூலதனம் 917.04 கோடி ரூபாயாகும். மொத்தம் 0.20 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளன. இதன் மதிப்பு பி எஸ் இ-யில் 1.13 கோடி ரூபாயாகும்.

லாபம்

லாபம்

கடந்த டிசம்பர் காலாண்டு நிலவரப்படி இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 109.97% அதிகரித்து 0.39 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3.91 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே விற்பனையானது 45.02% அதிகரித்து, 162.26 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 111.89 கோடி ரூபாயாகவும் இருந்தது.

விற்பனை நிலவரம்

விற்பனை நிலவரம்

இதே வருடாந்திர அறிக்கையின் படி 2021ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் நஷ்டம் 74.60% அதிகரித்து, 29.70 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய 2020ம் ஆண்டில் 17.01 கோடி ரூபாயாக இருந்தது. இதே விற்பனையானது 6.42% குறைந்து, 339.13 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது மார்ச் 2020வுடன் முடிவடைந்த ஆண்டில் 362.40 கோடி ரூபாயாக இருந்தது.

என்ன செய்கிறது?

என்ன செய்கிறது?

இந்த நிறுவனம் பயணிகள் வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் மற்றும் டிராக்டர்களுக்கான உலோக பாகங்கள், வெல்டட் அசெம்பிளிகள் மற்றும் பிற உதிரி பாகங்கள் என பலவற்றையும் உற்பத்தி செய்கிறது. இதன் இரண்டு அதி நவீன ஆலைகள் புனே (மகாராஷ்டிரா) மற்றும் பன்ட் நகர் (உத்தரகண்ட்) ஆகிய இடங்களிலும் உள்ளன. இது டாடா மோட்டார்ஸ், ஃபியட் பியாஜியோ மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்களுக்கு பாகங்களை உற்பத்தி செய்தும் வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

with 1726 percent returns, this Tata group stock turned into a multibagger in just 1 year

with 1726 percent returns, this Tata group stock turned into a multibagger in just 1 year/கோடீஸ்வரர் ஆக டாடா கொடுத்த வாய்ப்பு.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

Story first published: Monday, April 25, 2022, 14:21 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.