சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து வழக்கு- கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செயய்ப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் 2019 ஆம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயால், நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில், இந்த மனுக்களை கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்க உச்சநீதிமன்றம் இன்று ஒப்புக்கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே ஆஜரானார். அப்போது, மாநிலத்தில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் வாதாடினர். இதுதொடர்பான மனுவையும் தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதிகள் கவனத்தில் கொண்டனர்.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா  கூறுகையில். ‘இது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரிக்க வேண்டிய விவகாரம். எனவே, நான் அந்த அமர்வை மீண்டும் அமைக்க வேண்டும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.