சாமை சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?

சாமை நன்மைகள்:

  1. சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.
  2. அதிகமான நார்சத்து உள்ளது.
  3. ரத்தசோகையை நீக்க உதவும்.
  4. மலச்சிக்கலைப் போக்கும்.
  5. வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைத் தரும்.

இதில், இட்லி, மிளகுப் பொங்கல் (வெண்பொங்கல்), இடியாப்பம், காய்கறி பிரியாணி என வகை வகையாக உணவுகளைச் செய்ய முடியும்.

சாமை சர்க்கரை பொங்கல்:

தேவையான பொருட்கள்:

சாமை- 1 கப்

பாசிப் பருப்பு- 1/4 கப்

வெல்லம்- 1 1/2 கப்

ஏலக்காய்- ருசிக்கேற்ப

முந்திரி, பாதாம் – 10-12

நெய்- தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் பாசிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் சாமை மற்றும் வறுத்த பாசிப் பருப்பை (மூன்று கப்) தண்ணீர் சேர்த்து 6 விசில் வரும் வரை வேக விடவும்.

அடுத்து ஒரு கடாயில் நெய் ஊற்றி பாதாம், முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைய விடவும்.

இளநீர் முதல் எலுமிச்சை ஜூஸ் வரை… கோடையில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!

அந்த வெந்த சாமையை நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். பாகு ஆன பின்பு அதில் ஊற்றி சாமையுடன் போட்டு நன்றாக கிளறி விடவும். அதை அடுப்பில் வைத்து அதில் ஏலக்காய், நெய் மற்றும் வறுத்து வைத்த முந்திரி, திராட்சை மற்றும் பாதாம் சேர்த்து கிளறி எடுக்கவும்.

ருசியான மற்றும் சுட சுட பொங்கல் தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.