உற்பத்தி துறையை அடிப்படையாகக் கொண்ட சீனாவின் உற்பத்தி மாதிரியை கண்மூடித்தனமாக இந்தியா பின்பற்றக் கூடாது. ஆனால் அதற்கு பதிலாக சேவைத் துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை போல, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் மேற்கத்திய நாடுகளில் பின்னடைவை சந்திக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
முதலீடு செய்ய இதுதான் சரியான வாய்ப்பு.. முத்தான 3 பங்குகளை பரிந்துரை செய்த நிபுணர்கள்..!
மேலும் உற்பத்தி சார்ந்த வளர்ச்சிக்கு அனைத்து வளங்களையும் இந்தியா பயன்படுத்துவதை விட, சேவைத் துறையில் கவனம் செலுத்துவது விவேகமானது என்றும் கூறியுள்ளார்.
என்ன பிரச்சனை
சீனாவின் பாதையை பின்பற்றுவதில் பிரச்சனை என்னவெனில், சீனா ஏற்கனவே மேற்கத்திய நாடுகளின் உற்பத்தி வளர்ச்சியில் பின்னடைவை உருவாக்கியுள்ளது. ஆக இந்தியா அதே பாதையில் செல்ல முயன்றால் அதுவும் இன்னும் பின்னடைவைத் தான் கொடுக்கும் என கூறியுள்ளார். உண்மையில் இது யோசிக்க வேண்டிய விஷயமும் கூட.
அதிருப்தி
ரஷ்யா உக்ரைன் போரின் மத்தியில் சிக்கித் தவித்த இந்தியா மாணவர்கள். பிரதமர் மோடிக்கு SOSஅனுப்பியது போல, வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியாதது குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
டெலி மெடிசின்
இந்தியாவில் மருத்துவம் படிக்க ஆர்வம் அதிகம் உள்ளது. நம்மிடம் தேவை அதிகம் உள்ளது. ஆனால் போதிய மருத்துவ பயிற்சி நிறுவனங்கள் இல்லை, குறைவாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நாம் இங்கிலிருந்தே டெலி மெடிசின் மூலம் வெளி நாடுகளில் மருத்துவ சேவையை கொடுக்க முடியும். இதற்காக இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தலாம் என கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு பாதிப்பு
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு சிறுபான்மையினருக்கு எதிரான இந்தியாவின் தோற்றம், சர்வதேச சந்தையில் இந்தியப் பொருட்களுக்கும், நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியவை வெளிநாடுகள் நம்பகத்தன்மை இல்லாததாக கருதும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
China’s production model will not suit India; Raghuram rajan
China’s production model will not suit India; Raghuram rajan/சீனாவின் உற்பத்தி மாடல் இந்தியாவுக்கு சரிபட்டு வராது.. ஏன்.. ரகுராம் ராஜன் பதில் இது தான்!