கொரோனா தொற்று உலக நாடுகள் எந்த அளவிற்குப் பாதித்தோ அதே அளவு பல நிறுவனங்களின் வர்த்தகத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
அந்த வகையில் கொரோனா தொற்று அதிகம் இருந்த 2020-2021ஆம் ஆண்டுக் காலத்தில் அதிக வருமானம் மற்றும் லாபத்தைப் பெற்ற நிறுவனங்களின் தலைவர்களுக்குப் போனஸ் தொகை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துள்ளது.
பண்டமாற்று முறைக்கு தள்ளப்பட்ட சீனா மக்கள்.. கொரோனா வெறியாட்டம்..!
போனஸ் தொகை
ஆனால் ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவும் தமிழருமான சுந்தர் பிச்சை-யின் போனஸ் சரிந்துள்ளது. இந்நிலையில் 2021ஆம் ஆண்டில் அதிகப்படியான போனஸ் தொகை பெற்ற முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் யார் யார் தெரியுமா..? பொதுவாகப் பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்குப் போனஸ் பிரிவில் தான் அதிக வருமானத்தைப் பெறுவார்கள்.
டெக் நிறுவனங்கள்
மேலும் டாப் 10 டெக் நிறுவனங்களின் சிஇஓ-க்கள் 2020ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டில் சாராசரியாக 400 சதவீதம் அதிகப் போனஸ் தொகையைப் பெற்றுள்ளனர் என்பது தான் மிகவும் முக்கியமான விஷயமாக விளங்குகிறது. இதில் அதிகம் போனஸ் தொகையை வாங்கியது யார் தெரியுமா..?
டான் ஹாக் எங் – பிராட்காம்
ஃபின்போல்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் படி பிராட்காம் நிறுவனத்தின் சிஇஓ-வான டான் ஹாக் எங் 2020ல் $3.6 மில்லியன் டாலர் பெற்ற நிலையில் 2021ல் 1,586 சதவீத உயர்வில் 60.7 மில்லியன் டாலர் அளவு உயர்ந்துள்ளது.
சஃப்ரா அடா கேட்ஸ் – ஆரக்கிள்
ஆரக்கிள் நிறுவனத்தின் சிஇஓவான சஃப்ரா அடா கேட்ஸ் இப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார், இவர் சுமார் 2021ஆம் ஆண்டில் 999 சதவீதம் அதிகப் போனஸ் தொகையைப் பெற்றுள்ளார்.
பாட் கெல்சிங்கர் – இன்டெல்
பாட் 2021ஆம் ஆண்டுக்கு 713.64 சதவீதம் போனஸ் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் அவரது வருமானம் 22 மில்லியன் டாலரில் இருந்து 179 மில்லியன் டாலராக உயர்த்துள்ளது.
டிம் குக் – ஆப்பிள்
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி 571.63 சதவீத அதிகப் போனஸ் தொகையைப் பெற்றுள்ளார். இதன் மூலம் டிம் குக் வருமானம் 14.7 மில்லியன் டாலரில் இருந்து 98.7 மில்லியனாக டாலராக உயர்ந்துள்ளது.
ஆண்டி ஜாஸ்ஸி – அமேசான்
அமேசான் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வான ஆண்டி ஜாஸ்ஸி 2021ஆம் ஆண்டுக்கு 491.9 சதவீதம் அதிகப் போனஸ் தொகையைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இவரது மொத்த வருமானம் 211.9 மில்லியன் டாலராக உயர்ந்தது.
பிற தலைவர்கள்
இதேபோல் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங் 52.17 சதவீதம் போனஸ், மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் 5.93 சதவீத போனஸ் பெற்றுள்ளார்.
சுந்தர் பிச்சை
ஆனால் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ரீட் ஹேஸ்டிங்ஸ் போனஸ் 19.68 சதவீதம் சரிந்துள்ளது. இதேபோல் ஆல்பபெட், கூகுள் நிறுவனத்தின் சிஇஓவும் தமிழருமான சுந்தர் பிச்சை-யின் போனஸ் 2021ஆம் ஆண்டில் 14 சதவீதம் குறைவான போனஸ் தொகையைப் பெற்றுள்ளார்.
Alphabet, Google CEO Sundar Pichai bonus drops 14 percent, Others getting 400 percent bonus
Alphabet, Google CEO Sundar Pichai bonus drops 14 percent, Others get 400 percent bonus சுந்தர் பிச்சை பாவம்.. 2021 போனஸ் தொகையில் பெரும் ஓட்டை..!