வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டர்பர்: சூடானில் அரபு மொழி பேசுபவர்களுக்கும், அரபு அல்லாத பிற மொழி பேசுபவர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 168 பேர் உயிரிழந்நதனர், 98 பேர் காயமடைந்தனர்.
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாட்டில் 2003ம் ஆண்டு முதல் டர்பர் மாகாணத்தை மையமாக கொண்டு உள்நாட்டு போர் நிலவி வந்தது. இந்த நிலையில், டர்பரில் வசிக்கும் பழங்குடியினர்களில் அரபு மொழி பேசுபவர்கள் மற்றும் அரபு அல்லாத பிற மொழி பேசுபவர்கள் என இரு பிரிவுகளுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், பெரும் வன்முறையாக மாறியது.
இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், வீடுகளும், கால்நடை பண்ணைகளும் சூறையாடப்பட்டன. கடந்த இரு நாட்களாக நடைபெற்ற மோதலில் இதுவரை 168 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 98க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சூடான் அரசு உயர்மட்ட அதிகாரிகளை அங்கு அனுப்பி வைத்துள்ளது.
Advertisement