சென்னை விமான நிலையத்தில் உணவு மற்றும் குளிர் பானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து பயணிகள் புகார் அளித்து வந்த நிலையில், அவற்றின் விலை குறையவுள்ளது.
விரைவில் உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களில் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் விலை குறையவுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
மிக அதிக எண்ணிக்கையிலான புகார்கள் கிடைக்கப் பெற்றன. இதையடுத்து, 20 சதவீதம் வரை உணவுப் பொருட்களின் விலையை குறைக்கலாம் என முடிவு செய்துள்ளோம்.
பயணிகள் அதிருப்தியில் இருப்பதால், நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, இப்போது உணவு மற்றும் பானங்களின் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளோம். பேக் செய்யப்பட்ட பொருட்கள் வழக்கம் போல் எம்ஆர்பி விலைக்கே விற்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில், காபி மற்றும் டீயின் விலை அதிகமாக இருந்ததால், பயணிகளுக்கு இரண்டு டெர்மினல்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் மானிய விலையில் விற்பனை நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று விமான நிலைய அதிகாரி கூறினார்.
விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையம் வருவதால், உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையத்தில் வணிகப் பிரிவுக்கான இடம் கடுமையாக உயரும்.
அதாவது சென்னை விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஏறும் முன் உணவு மற்றும் ஷாப்பிங் செய்வதற்கான கூடுதல் விருப்பங்கள் கிடைக்கும்.
ஆளுனர் அதிகாரம் பறிப்பு; துணைவேந்தர்களை அரசு நியமனம் செய்ய மசோதா: சட்டமன்றத்தில் தாக்கல்
டெர்மினல்களில் அதிக நேரம் செலவழிப்பதால், ட்ரான்ஸிட் பயணிகளுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.