டிவிட்டர் விற்பனை.. இறுதி அறிவிப்பு.. எலான் மஸ்கிற்கு ஜாக்பாட்..!

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது சொந்த பணத்தில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த நொடியில் இருந்து தொடர்ந்து டிவிட்டர் நிறுவனத்தைச் சுற்றி பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது என்பதை மறுக்க முடியாது.

ஒருபக்கம் டிவிட்டர் நிர்வாகக் குழு எலான் மஸ்க் நிர்வாகக் குழு ஆர்வமாக இருக்கும் நிலையில் மறுபுறம் நிர்வாகக் குழு உறுப்பினர் சிலரும், உயர்மட்ட நிர்வாகமும் மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாள் இன்று துவங்கியுள்ள நிலையில், இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ்டர் எலான் மஸ்க்.. இது தான் உண்மையான டெஸ்லா வாகனம்.. ஆனந்த் மஹிந்திராவின் குறும்புத்தனமான பதிவு!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் ஃப்ரீ ஸ்பீச் முக்கியக் கொடுக்கும் நிலையில், சமுக வலைத்தளப் பிரிவில் மக்களுக்கு ஒரு சிறப்பான தளத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக, தான் அதிகம் பயன்படுத்தும் டிவிட்டர் பில்லியன் டாலருக்கும் வாங்கத் தயார் என் அறிவித்தார். இதற்காகக் கோரிக்கையும் டிவிட்டர் நிர்வாகக் குழுவிலும் கொடுத்தார்.

டிவிட்டர் நிர்வாகக் குழு

டிவிட்டர் நிர்வாகக் குழு

டிவிட்டர் நிர்வாகக் குழு கடந்த ஒரு வாரமாக எலான் மஸ்க்-ன் பில்லியன் டாலர் கைப்பற்றல் திட்டத்தை ஏற்பதா வேண்டாமா என ஆலோசித்து வந்த நிலையில், இன்று இறுதிக்கட்ட ஆலோசனை துவங்கியுள்ள நிலையில் டிவிட்டர் தனது இறுதி முடிவை முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இறுதி அறிவிப்பு
 

இன்று இறுதி அறிவிப்பு

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன்று டிவிட்டர் நிர்வாகக் குழு டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்தை ஏற்பது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனை துவங்கியுள்ளதாகவும், இதன் முடிவுகளை அமெரிக்க நேரத்தின் படி மாலை அல்லது மதியத்திற்குள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

ஆனால் ஏற்கனவே டிவிட்டர் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் poison pill உதவியுடன் பல முதலீட்டாளர்கள் அதிகப்படியான பங்குகளைக் கைப்பற்றி எலான் மஸ்க்-ஐ 15 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வாங்க முடியாத அளவிற்குக் கட்டம் கட்டி வைத்துள்ளனர்.

46 பில்லியன் டாலர்

46 பில்லியன் டாலர்

ஆனாலும் எலான் மஸ்க் அதிகம் பிரபலம் இல்லாத மற்றும் அவருடை எண்ணத்திற்கு இணங்கும் ஒரு தனியார் முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து டிவிட்டரை கைப்பற்ற 46 பில்லியன் டாலர் அளவிலான தொகையைத் திரட்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Twitter may confirm Deal With elon Musk today

Twitter may confirm Deal With elon Musk today டிவிட்டர் விற்பனை.. இறுதி அறிவிப்பு.. எலான் மஸ்கிற்கு ஜாக்பாட்..!

Story first published: Monday, April 25, 2022, 19:11 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.