டெல்லி: டெல்லியில் 3 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். கட்டட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளனரா எனத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.