தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார்
ரஜினிகாந்த்
. அதனாலேயே அவரின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தலைவர் 170 படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குவதாக முன்பு தகவல் வெளியானது. அதன் பிறகு அந்த பேச்சு அடங்கிவிட்டது. அருண்ராஜா இயக்கவில்லையாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தலைவர் 170 படத்தை அருண்ராஜா காமராஜ் தான் இயக்கவிருக்கிறார் என்று மீண்டும் பேசப்படுகிறது. ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிறார்
தனுஷ்
.
ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ்ந்தபோதே தனுஷுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.
தனுஷை பிரிந்த பிறகு 3 படங்களை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்
ஐஸ்வர்யா
. தன் அப்பாவை வைத்து படம் பண்ண வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வரவில்லையாம். அதே சமயம் அந்த வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்வேன் என்கிறார்.
போகிற போக்கை பார்த்தால் ரஜினியின் கடைசி பட வாய்ப்பு தனுஷுக்கோ, ஐஸ்வர்யாவுக்கோ கிடைக்காது போன்று. முன்னதாக தலைவர் 170 படத்தை தனுஷ் இயக்க, ஐஸ்வர்யாவும், தங்கை சவுந்தர்யாவும் சேர்ந்து தயாரிப்பார்கள் என்று தகவல் வெளியானது.
அந்த தகவலின்படி இனி நடக்காது என்பது அனைவருக்கும் தெரியும்.
தீராக் காதல்: ஐஸ்வர்யா ரஜினியின் வாழ்வில் மேலும் ஒரு புது வரவு