தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்வது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் தனுஷின் அண்ணன் செல்வராகவனும், அண்ணி கீதாஞ்சலியும் ஐஸ்வர்யாவுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள்.
அதிலும் கீதாஞ்சலியும், ஐஸ்வர்யாவும் நெருக்கம். ஐஸ்வர்யாவின் கெரியரில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டாலும் முதல் ஆளாக வாழ்த்துவது
கீதாஞ்சலி
தான்.
இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு மிகவும் பிடித்த Bevzilla காபி கியூப்ஸ் பாக்கெட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறார் கீதாஞ்சலி.
தனக்கு மிகவும் பிடித்த காபி கிடைத்த சந்தோஷத்தில் அந்த பாக்கெட்டை புகைப்படம் எடுத்து இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு கீதாஞ்சலிக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.
அவரும், கீதாஞ்சலியும் இவ்வளவு நெருக்கமாக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஐஸ்வர்யாவின் மனதை மாற்றுமாறு கீதாஞ்சலியிடம்
தனுஷ்
ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செல்வராகவனை அப்பா போன்று பார்க்கிறார் ஐஸ்வர்யா. அதனால் ஐஸ்வர்யாவையும், தனுஷையும் சேர்த்து வைக்குமாறு செல்வராகவனிடமும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.
முன்னதாக தனுஷ், ஐஸ்வர்யா தங்களின் பிரிவை அறிவிக்கும் முன்பு ஒரே சோகமாக ட்வீட் செய்து வந்தார் செல்வராகவன். அதை பார்த்தவர்களோ, அவர் தான் மனைவியை பிரியப் போகிறார் என்று தவறாக புரிந்து கொண்டார்கள்.
தனுஷுக்கு கிடைக்காதது, ஐஸ்வர்யாவுக்கும் கிடைக்காது போல