சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 33, பெண்கள் 22 என மொத்தம் 55 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 37 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 53,607 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 15,220 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 27 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 334 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 52 ஆகவும், சென்னையில் 34 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் புதிதாக மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வளாகத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் கடந்த வியாழக்கிழமை மந்தாகினி என்ற விடுதியில் தங்கியிருந்த மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொடர்பில் இருந்த மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 3 பேருக்கும், அதன் பின்னர் 18 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பரிசோதனையை தீவிரப்படுத்திய சுகாதாரத் துறை, அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியது. இதனை அடுத்து, படிப்படியாக கரோனா தொற்றின் எண்ணிக்கை உயர்ந்தது. ஐஐடி வளாகத்தில் நேற்று வரை கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்திருந்தது.