சென்னை: தமிழகத்தில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகள் அணிய தடை விதிக்கக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கர்நாடகாவை போல தமிழ்நாட்டிலும் பள்ளிகல்லூரி மாணவர்களிடையே வேறுபாட்டை களையும் நோக்கில் “ ஹிஜாப் போன்ற மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகளை அணி தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஹிஜாப் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதனை அடுத்து அந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கோபிநாத் கூறினார். இதனை தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘