தமிழக பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணிய தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு மனு அளிக்கப்பட்டது.
கர்நாடகாவில் ஏற்பட்ட பிரச்சினைகள் போல தமிழகத்தில் உருவாகாமல் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று, இந்து முன்னேற்ற கழக தலைவர் இந்த மனுவினை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார்.
மாணவர்களிடம் உள்ள வேறுபாட்டை களைய 1960ஆம் ஆண்டு சீருடை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பல பள்ளிகளில் இது பின்பற்றப்படுவதில்லை என்று, அந்த மனுவில் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பள்ளிகளில் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணிய தடை விதிக்க கோரிய இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் எப்படி உத்தரவு தர முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து, பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் சீருடை அணிய தடை விதிக்கக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது.