தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு (Photo)



தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தியதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இன்றைய சவால்களைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதும், தீர்வில் அனைத்து இலங்கையர்களின் நலன்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகும” என குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது அமெரிக்க தூதுவர் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவையும் சந்தித்துள்ளார்.

“இன்றைய பொருளாதார சவால்கள் மற்றும் வடமாகாணத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிப்பது என்பது குறித்து ஆளுநருடன் கலந்துரையாடியதாக” என தூதுவர் தெரிவித்தார்.

இலங்கை முழுவதும் நிலையான முதலீட்டை ஈர்ப்பது மற்றும் பொருளாதார வாய்ப்பை ஊக்குவிப்பது அமெரிக்காவின் முன்னுரிமை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.