தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மாஸ் காட்டிய ‘கேஜிஎஃப் 2’ – ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு?

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கே.ஜி.எஃப். 2’ ஒட்டுமொத்தமாக வசூலில் 1000 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப். 2’. கன்னடம் தவிர, தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 2 வாரங்கள் ஆன போதிலும், பல திரையரங்குகளில் வரவேற்பு குறைந்த வண்ணம் இல்லை. இதனால் எதிர்பார்ப்புகளையும் மீறி இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.

‘கே.ஜி.எஃப். 2’ அபார வெற்றியால், நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகத்திலேயே விமர்சனக்களை சந்தித்துள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இதற்கு காரணம் படத்தின் திரைக்கதை வலுவில்லாமல் இருப்பதாக விஜயின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். முதல்வாரத்தில் ‘பீஸ்ட்’ படத்தால், ‘கே.ஜி.எஃப். 2’ படத்திற்கு குறைந்தளவே திரையரங்குகள் ஒதுக்கப்பட்டநிலையிலும் வசூலில் சாதனை புரிந்தநிலையில், தற்போது அதிகளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

image

இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் கடந்த 3 நாட்களில் நாள் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய் என்ற கணக்கில், 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது ‘கே.ஜி.எஃப். 2’. கடந்த 11 நாட்களில் தமிழகத்தில் 71.22 கோடி ரூபாய் ‘கே.ஜி.எஃப். 2’ திரைப்படம் வசூலித்துள்ளது. இதேபோல் இந்தியில், 2 வாரங்களில் 321.12 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 900 கோடி ரூபாயை வருவாய் ஈட்டுள்ளது. விரைவில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்திற்கு அடுத்ததாக ‘கே.ஜி.எஃப். 2’ படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.