புதுடில்லி: இந்தியா குறித்து தவறான தகவல்களை பரப்பிய 10 இந்திய யூடியூப் சேனல் மற்றும் 6 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் என மொத்தம் 16 யூடியூப் செய்தி சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளது.
தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் 22 யூடியூப் சேனல்களுக்கு அதிரடியாக தடை விதித்தது. இந்நிலையில், மேலும் 16 யூடியூப் சேனல்களுக்கு எதிராக மத்திய அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்குக்கு பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட 16 யூடியூப் செய்தி சேனல்களுக்கு தடை விதித்து, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய சேனல்கள் மட்டுமன்றி, பாகிஸ்தான் சேனல்களும் இதில் அடக்கம்.
இந்தியாவை சேர்ந்த 10 சேனல்கள், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் 6 யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐடி விதிகளின் கீழ், அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த சேனல்களின் வீடியோக்களுக்கு, 68 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தடை செய்யப்பட்ட 16 சேனல்கள்
Advertisement