தாய் மற்றும் மகன் பாசம் குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒவ்வொரு தாயும் தன் மகனை மிகவும் நேசிப்பார். பிள்ளைகளும் அப்படியே தாயை நேசிப்பார்கள். இந்த அன்பை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு தாயின் அன்பை விட சிறந்தது இந்த உலகில் எதுவுமில்லை. ஆனால், அப்படியான தாயைப் பற்றி ஒரு சிறுவனுக்கு கூகுளில் தேசியபோது அதிர்த்தி காத்திருந்தது.
இங்கிலாந்தின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்த ரீஸ் மேடிக் என்பவருக்கு தான் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது. ரிக்கி மேடிக் மற்றும் அவரது சகோதரர் ஆலன் இருவரையும் கரோல் மேடிக் என்பவர் குழந்தையாக இருந்தபோது தத்தெடுத்தார். ஆனால் ரிக்கியும், ஆலனும் தங்கள் உண்மையான தாயான லிண்டா மெக்ஆர்டியை அவ்வப்போது சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். ரிக்கியின் தாயார் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸில் இரு குழந்தைகளையும் பார்க்க வருவார்
மேலும் படிக்க | கூகுள் டூடுல் கெளரவிக்கும் ஈராக் பெண் கலைஞர் நஜிஹா சலீம் பின்னணி
வர இல்லையென்றால் போனிலாவது அழைத்து பேசுவார். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக மெக்ஆர்டி தனது குழந்தைகளை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளவில்லை. நேரிலும் வந்து சந்திக்கவில்லை. இது ரிக்கிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அம்மாவுக்கு என்ன ஆனது என்று யோசிக்க தொடங்கியவனுக்கு, அம்மாவின் விலாசம் உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கவிலை. இதனால், எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார். கூகுளில் இருந்து தகவல் ஏதேனும் கிடைக்கிறதா? என்றும் தேடிப் பார்த்துள்ளார்.
மேலும் படிக்க | Corona 4th Wave: இரும்பு கோட்டையாகும் ஷாங்காய் நகரம்; கடுமையான லாக்டவுன் அமல்
ஒருநாள் இரண்டு மணியளவில், அவனுக்கு அந்த அதிச்சி தகவல் கிடைத்துள்ளது. 2018 ஆம் ஆண்டே தன்னுடைய உண்மையான தாய் லிண்டா இறந்துவிட்டது தெரியவந்தது. போதைப் பொருளுக்கு அடிமையான அவர், அது தொடர்பான ஒரு பிரச்சனையில் மற்றொருவர் தன் தாயைக் கொன்றதையும் ரிக்கி அறிந்துள்ளார். இது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் இறந்ததை கூகுள் மூலம் அறிந்து கொண்டது ரிக்கிக்கு பெரும் வேதனையைக் கொடுத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR