தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர்
விவேக்
. சின்னக் கலைவாணர் என்றும் அழைக்கப்பட்டு வந்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருந்தார் நடிகர் விவேக்.
மறைந்த அணு விஞ்ஞாணியும் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று கொண்ட நடிகர் விவேக் சமூக ஆர்வலராகவும் இருந்தார். நடிகர் விவேக் தமிழகம் முழுவதும் லட்சக் கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
Aishwarya Rajinikanth: கொழுந்தனுடன் கூட்டு சேரும் ஐஸ்வர்யா… செம காண்டில் சவுந்தர்யா!
ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள நடிகர் விவேக், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி திடீர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக மரணமடைந்தார். அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தனது மகள் மற்றும் விவேக்கின் உதவியாளரான செல்முருகனுடன் முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார். அப்போது, நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்று கோரிக்கை கடிதம் அளித்துள்ளார். அருட்செல்வி முதல்வரை சந்தித்த போட்டோக்கள் வெளியாகியுள்ளது.
சட்டசபை உதயநிதி பேச்சு; பாராட்டிய லிங்குசாமி!