ராய்ச்சூர் : காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனம் நொந்த காதலர்கள், ஒரே சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ராய்ச்சூர் சிந்தனுாரின், ஆர்.எச்.3 கேம்பில் வசித்த லவா, 25, கரினா, 20, பரஸ்பரம் காதலித்தனர். இவர்களின் திருமணத்துக்கு, குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரண்டு மாதங்களுக்கு முன், பெற்றோரின் நெருக்கடிக்கு பணிந்து லவா, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.காதலர் திருமணமானதை அறிந்த கரினா, அதிர்ச்சியடைந்தார். மற்றொரு பக்கம் காதலியை மறக்க முடியாமல், லவாவும் மனம் நொந்தார். எனவே இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று முன் தினம் இரவு, ஆர்.எச்.3 கேம்ப் அருகில் உள்ள மரத்தில், ஒரே சேலையின் இரண்டு நுனிகளில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டனர்.சிந்தனுார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
ராய்ச்சூர் : காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனம் நொந்த காதலர்கள், ஒரே சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ராய்ச்சூர் சிந்தனுாரின், ஆர்.எச்.3 கேம்பில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.