பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய, மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உதகையில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் பல்கலைகழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். ஆளுநர் துணைவேந்தர்களை நியமனம் செய்து வரும் நிலையில், அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தமிழக அரசு நியமிக்கும் வகையிலும், துணை வேந்தர் நியமனங்களில் கடைபிடிக்கக் கூடிய நடைமுறைகளின் கொண்டுவரவேண்டிய மாறுதல் உட்பட பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது.
இந்த மசோதா குறித்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், துணை வேந்தர்களை ஆளுநர் நியமிப்பதால் அரசு கொள்கை முடிவு எடுப்பதில் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். 13 பல்கலைக்கழகங்கள் வரலாற்று சிறப்புமிக்க பணிகளை ஆற்றி வருகின்றன.