தமிழக சட்டமன்றத்தில் பல்கலைகழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். ஆளுநர் துணைவேந்தர்களை நியமனம் செய்து வரும் நிலையில், அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தமிழக அரசு நியமிக்கும் வகையிலும், துணை வேந்தர் நியமனங்களில் கடைபிடிக்கக் கூடிய நடைமுறைகளின் கொண்டுவரவேண்டிய மாறுதல் உட்பட பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது.
துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவை மநீம வரவேற்கிறது. பொதுப் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை மகாராஷ்டிரா கொண்டு வந்தபோதே, தமிழகம் இதனை முதலில் மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற நம் (30.12.2021) அறிக்கையை ஏற்று செயல்பட்ட அரசுக்கு நன்றி. https://t.co/FhOG4IYC4w
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 25, 2022
இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் பல்கலைகழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சட்ட மசோதா தாக்கல் செய்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவை மநீம வரவேற்கிறது. பொதுப் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை மகாராஷ்டிரா கொண்டு வந்தபோதே, தமிழகம் இதனை முதலில் மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற நம் (30.12.2021) அறிக்கையை ஏற்று செயல்பட்ட அரசுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.