சென்னை:
துணை வேந்தர்கள் நியமன மசோதா குறித்து முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கூறியதாவது:-
துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வேண்டும் என்ற மசோதா தேவை இல்லாதது. துணை வேந்தர்கள் நியமனத்தில் அரசியல் குறுக்கீடுகள் இருக்கக் கூடாது.
தற்போதைய கவர்னரை பிடிக்காது என்பதால் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. துணை வேந்தர்களை முதல்-அமைச்சரே நியமித்தால் 100 சதவீதம் அரசியல் தலையீடு வந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.